Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: சூர்யா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த அந்த மிகப்பெரிய கம்பேக் தற்போது நிஜமாகி வருவது போலத் தெரிகிறது. RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் மிரட்டலான வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தை மூன்று நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

முதல் நாளில் நல்ல ஓப்பனிங் எடுத்த இந்த படம், இரண்டாம் நாளில் பெரிய ஜம்ப் அடித்த நிலையில், மூன்றாவது நாளில் அதையும் தாண்டி வசூலை உயர்த்தி சாதனை படைத்துள்ளது. வெளியாகி வெறும் மூன்று நாட்களிலேயே உலகளவில் ₹120 கோடியை தாண்டியிருப்பது கோலிவுட் வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Suriya Karuppu RJ Balaji Box Office Collection Tamil Cinema

கருப்பு மூன்றாவது நாள் வசூல் நிலவரம்

பாக்ஸ் ஆபிஸ் கணக்குகளை வெளியிடும் சாக்னில்க் தளத்தின் தகவல்படி, கருப்பு திரைப்படம் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மட்டும் ₹28.35 கோடி நெட் வசூல் செய்துள்ளது. இது இரண்டாம் நாள் வசூலான ₹24.15 கோடியை விட 17.4 சதவீதம் அதிகம். பொதுவாக பெரிய ஓப்பனிங் பெற்ற படங்கள் முதல் வார இறுதியின் கடைசி நாளில் நிலைத்த வசூலை வைத்திருந்தாலே வெற்றியாக பார்க்கப்படும். ஆனால் கருப்பு தொடர்ந்து வளர்ச்சி காட்டியிருப்பது இந்த படத்திற்கு கிடைத்துள்ள மக்களுடைய ஏற்றுக்கொள்ளுதலை தெளிவாக காட்டுகிறது.

கருப்பு மொத்த வசூல் நிலவரம்

மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் கருப்பு திரைப்படத்தின் மொத்த நெட் வசூல் ₹68 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய மொத்த கிராஸ் வசூல் ₹78.75 கோடியை எட்டியுள்ளது. வெளிநாடுகளிலும் சூர்யாவின் மாஸ் மீண்டும் வேலை செய்திருக்கிறது. மூன்றாம் நாளில் மட்டும் ₹13 கோடி ஓவர்சீஸ் வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மொத்த வெளிநாட்டு வசூல் ₹42 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளவில் மொத்த வசூல் ₹120.75 கோடியை கடந்துள்ளது.

Suriya Karuppu RJ Balaji Box Office Collection Tamil Cinema

மாநிலம் வாரியாக வசூல் நிலவரம்

தமிழில் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது நாளில் தமிழ் ரிலீஸில் மட்டும் ₹24.20 கோடி வசூல் கிடைத்துள்ளது. தமிழ் பதிப்பின் ஒட்டுமொத்த ஆக்குபென்சி 73 சதவீதமாக இருந்தது. குறிப்பாக சென்னை நகரில் 92 சதவீத ஆக்குபென்சி பதிவாகியுள்ளது. காலை காட்சியிலேயே 88 சதவீதம் இருந்த நிலையில், மதியம் 95 சதவீதம் வரை உயர்ந்தது. கோயம்புத்தூரில் 91.5 சதவீதம், திருச்சியில் 92.8 சதவீதம், திண்டுக்கல்லில் 81.8 சதவீதம் என பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் நிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தெலுங்கு மார்க்கெட்டிலும் படம் நல்ல நிலைப்பாட்டை காட்டியுள்ளது. மூன்றாவது நாளில் தெலுங்கு ரிலீஸில் ₹4.15 கோடி வசூல் கிடைத்துள்ளது. ஹைதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் நல்ல ஆக்குபென்சி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படம் தமிழ் மார்க்கெட்டை தாண்டி தென்னிந்திய அளவிலும் ஸ்ட்ராங்காக சென்று கொண்டிருக்கிறது.

மாநில வாரியாக பார்க்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் மூன்றாம் நாளில் ₹20.25 கோடி கிராஸ் வசூல் கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா சேர்த்து ₹5 கோடி, கர்நாடகா ₹4.25 கோடி, கேரளா ₹2.65 கோடி, மற்ற இந்தியா ₹0.75 கோடி வசூல் கிடைத்துள்ளது. இது சூர்யாவின் ரசிகர் அடிப்படை இன்னும் வலுவாக இருப்பதை நிரூபிக்கிறது.

Suriya Karuppu RJ Balaji Box Office Collection Tamil Cinema

கருப்பு படத்தின் கதை

இந்த படத்தின் கதையும் ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கருப்பு ஒரு சாதாரண மாஸ் படம் அல்ல; சமூக கருத்து, சட்ட அமைப்பின் ஊழல், நீதி தேடும் சாதாரண மக்களின் வேதனை, அதற்கிடையில் தெய்வீக தலையீடு போன்ற அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்-சோஷியல் த்ரில்லர். சூர்யா இந்த படத்தில் சரவணன் என்ற கருப்பசாமியின் மனித அவதாரமாக அவர் வருவதாக பேசப்படுகிறது.

கதையின் மையத்தில், சட்ட அமைப்பில் சிக்கி தவிக்கும் ஒரு தந்தை – மகள் ஜோடி இருக்கிறார்கள். அதிகாரம், பணம், ஊழல் ஆகியவற்றில் அவர்கள் சிக்கிக்கொள்ளும்போது, அவர்களுக்கு நீதி கிடைக்க என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் மையம். இதனால்தான் குடும்ப ரசிகர்களும், மாஸ் ரசிகர்களும் சமமாக இந்த படத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Suriya Karuppu RJ Balaji Box Office Collection Tamil Cinema

கருப்பு பட நடிகர்கள்

இந்த படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, RJ பாலாஜி, இந்திரன், ஸ்வாசிகா, டேவிட் யேட்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். RJ பாலாஜி இயக்கியிருப்பதால் சமூக கருத்தும் கமர்ஷியல் அம்சங்களும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. சமீப காலமாக சூர்யாவுக்கு தியேட்டர் அளவில் எதிர்பார்த்த வெற்றி அமையவில்லை என்ற பேச்சு இருந்த நிலையில், கருப்பு அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்வதாக அமைந்திருக்கிறது.

முதல் நாள் ₹15.50 கோடி, இரண்டாம் நாள் ₹24.15 கோடி, மூன்றாம் நாள் ₹28.35 கோடி என தொடர்ந்து உயர்ந்து வரும் வசூல் ட்ரெண்ட், இந்த படம் இன்னும் சில நாட்கள் ஸ்ட்ராங்காக ஓடும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. வாரநாட்களிலும் இதே வேகம் தொடர்ந்தால் கருப்பு சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக மாறும் என்று சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed