Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்! | Jurassic World Rebirth Review: The creativity of the franchise is nearing its extinction

Jurassic World Rebirth Review

Jurassic World Rebirth Review

17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டைனோசர் ஆராய்ச்சி கூடத்தில் குப்பையாகப் போடப்பட்ட சாக்லேட் கவரால் பெரும் விபத்து நேருகிறது. நிகழ்காலத்தில் பூமியின் சுற்றுச்சூழல், டைனோசர்களுக்கு ஒத்துவராததாக மாறிவிட்டது. இப்போது மீதமுள்ள டைனோசர்கள் வெப்பமண்டல தீவுகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அந்தத் தீவுகளில் இருக்கும் மூன்று பிரமாண்ட உயிரினங்களின் (நிலம், கடல், வானம்) டி.என்.ஏ-வில் மனிதர்களை இதய நோயிலிருந்து காக்கும் மருந்தினைத் தயாரிக்கும் ரகசியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பெறுவதற்காக, மருந்து நிறுவன அதிபர் மார்ட்டின் க்ரெப்ஸ் (ரூபர்ட் ஃப்ரெண்ட்) ஒரு ரகசியப் பயணத்தை அந்தத் தீவை நோக்கித் தொடங்குகிறார். அவருடன் முன்னாள் ராணுவ அதிகாரி ஜோரா பென்னட் (ஸ்கார்லட் ஜான்சன்), தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி லூமிஸ் (ஜானாதன் பெய்லி), கடற்பயணத்துக்கான கேப்டன் டன்கன் (மஹர்ஷலா அலி) மற்றும் அவரது உதவியாளர்கள் ஆகியோர் இணைகின்றனர். அவர்கள் செல்லும் வழியில், கடல்வாழ் டைனோசரால் தாக்கப்பட்டு படகு விபத்தில் சிக்கிய மற்றொரு குடும்பத்தையும் மீட்கிறார்கள். இதன் பின்னே கடல், நிலம், ஆகாயம் என மூன்று பகுதிகளிலும் நடக்கும் சாகசப் போராட்டமே ‘ஜுராசிக் வேர்ல்டு ரீபெர்த்’ படத்தின் கதை.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed