நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா என்பவரை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தார். இருவரின் திருமணம் திருப்பதில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடியாக இருக்கிறார் ஜான்வி கபூர். இவர் அணியும் உடை, லுக் உள்ளிட்டவைகளால் டிரெண்டிங்கில் இருப்பார். ஸ்ரீதேவியின் மகளாக இருந்தாலும் இவருக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவரும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

மனம் திறந்த ஜான்வி

ஜான்வி கபூர் – ஷிகர் பஹாரியா இருவரும் காதலிப்பது உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகி ஃபோட்டோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. போனி கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள மைதான் படத்தின் திரையிடல் காட்சிக்கு வந்திருந்த ஜான்வி, ஷிகர் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தார். இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஷிகரை ஜான்வி அன்புடன் ‘ஷிக்‌ஷு’ என்று அழைப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூர் காதலிப்பது வைரலாகி வருவதற்கு காரணம் பிரபல நிகழ்ச்சியானா ‘காஃபி வித் கரணில் ஷிகர் குறித்து ஜான்வி பேசியது தான். அந்த நிகழ்ச்சியில் ஜான்வி கபூர், ஷிகர் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது, ஷிகர் பெயருடன் நெக்லஸ் அணிந்ததும் இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்வதாக இருக்கிறது. இதை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஜான்வி கபூர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கள் இருக்கிறார்.

திருப்பதில் திருமணம்

ஜான்வி கபூருக்கும் மிகவும் பிடித்தமான கோயில் திருப்பதி. அவர் திருப்பதி கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவதும் உண்டு. தனது திருமணம் குறித்து நேர்க்காணல் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்த ஜான்வி,” திருமணம் எங்கு நடைபெற வேண்டும் என்பது குறித்து நான் முடிவெடுத்து விட்டேன். முதலில் இருந்தே நான் அது தொடர்பாக தெளிவாக இருந்தேன். திருப்பதியில்தான் என் திருமணம் என்று” என்று தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு அணியும் ஆடை குறித்தும் ஜான்வி பகிர்ந்துள்ளார். திருமணத்தில் கோல்டன் பார்டருடன் காஞ்சிவரம் புடவை அணிய விருப்பம் உள்ளதாகவும் ஜான்வியின் கணவர் வேட்டி அணிய திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்று திருமணம் ஆசை குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ஜான்வி கபூர் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதோடு, ஜான்வி கபூர் சேலை அணிந்து திருப்பதில் திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் அழகாக இருப்பதாகவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக ஷிகர் பஹாரியா எங்கள் வாழ்வில் இருப்பது பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம் என்று போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
стоимость аренды авто в пхукете аренда авто в пхукете цены
накрутка пф в яндекс накрутка поведенческих факторов яндекс пф топ
пф яндекс услуга сео заказать накрутка пф
накрутка сайта сео заказать накрутка пф
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ் | ACTPnews.com

"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" – பெ.சண்முகம் கடிதம் | ACTPnews.com

"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" – சொல்கிறார் கே.எல்.சுதீஷ் | ACTPnews.com

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்! | ACTPnews.com

тай экскурсии пхукет лучшие экскурсии на пхукете 2026