ஐபிஎல்

Last Updated:

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது. மாறாக வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும்

ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதுவரை RCB, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

நான்காவது இடத்திற்கு பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவுபெற உள்ள நிலையில், முதல் மேட்ச்சில் ராஜஸ்தான் தோற்றால் இன்றைய இரண்டாவது போட்டியின் முடிவில் தான் பிளே ஆஃப் செல்லும் நான்காவது அணி இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இன்றைய இரண்டு போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன. தற்போது தொடங்கியுள்ள முதல் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை பொறுத்த அளவில் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது. மாறாக வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். மற்ற கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிடும். மாறாக ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறுவது மட்டுமல்லாமல், அடுத்த சுற்றுக்கு செல்லும் நான்காவது அணியை இறுதிச் செய்ய ரசிகர்கள் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவையும் பார்க்க வேண்டும்.

இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. தற்போது 13 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 13 புள்ளிகள் மட்டுமே பெற்று, நெட் ரன் அடிப்படையில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெகு சீக்கிரமாக மேட்சை முடித்தால், அதிக நெட் ரன் ரேட் உள்ள பஞ்சாப் அணியை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இதனால் இன்றைய ஆட்டங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளன.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed