ராஜஸ்தான் அணி

Last Updated:

வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 50 ரன்களும் குவித்து அணியின் அசுரத்தனமான ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர்.

ராஜஸ்தான் அணி
ராஜஸ்தான் அணி

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத்தை எதிர்கொள்கிறது.

சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த வாழ்வா-சாவா நாக்-அவுட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 50 ரன்களும் குவித்து அணியின் அசுரத்தனமான ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர். ஐதராபாத் தரப்பில் பிரபுல் ஹிங்கே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் 17 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார்.

மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி வெறும் 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தாலும், ஆர்ச்சரின் பந்துவீச்சிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசன் (18 ரன்கள்), ஸ்மரன் ரவிச்சந்திரன் (1 ரன்) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஐதராபாத் அணி 57 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் சலில் அரோரா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்கப் போராடியது. நிதீஷ் ரெட்டி 20 பந்துகளில் 38 ரன்களும், சலில் அரோரா 21 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 ரன்னில் ஏமாற்றமளித்தார். இறுதிப்பகுதியில் ஷிவாங் குமார் 27 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், 19.2 ஓவர்களில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் மிரட்டிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக்கொடுத்தாலும், ஆரம்பக்கட்ட முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானார்.

இவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, நந்த்ரே பர்கர் மற்றும் சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யஷ் ராஜ் புஞ்சா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த 47 ரன்கள் வித்தியாசத்திலான மாபெரும் வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிபையர்-2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி இத்தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed