குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்

Last Updated:

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த கேப்டன் ஷுப்மன் கில், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார்.

குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்
குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் ஷுப்மன் கில்லின் அதிரடி சதம் அணியின் இந்த இமாலய வெற்றிக்கு வழிவகுத்தது.

முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த வாழ்வா-சாவா போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.

இறுதி கட்டத்தில் டோனோவன் ஃபெரைரா 11 பந்துகளில் 38 ரன்கள் விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. குஜராத் தரப்பில் காகிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதன் தொடக்க ஜோடி அசுரத்தனமான தொடக்கத்தைத் தந்தது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்து அசத்தியது. சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த கேப்டன் ஷுப்மன் கில், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார். அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர், 53 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்து சதமடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் ராகுல் திவேத்தியா 17 ரன்கள் சேர்த்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணியின் கோப்பை கனவை தகர்த்த குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டிக்கு ‘மாஸாக’ தகுதி பெற்றுள்ளது.

ஞாயிறு அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed