“இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு’ என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், அவரையே தொடர்புகொண்டு இந்த பேச்சு குறித்து கேட்டோம்.

எம்.எல்.ஏ கருப்பையா கூறியதாவது, ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன். ஜல்லிக்கட்டு என்பது அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என அந்தந்த ஊர்களில் அதன் பாரம்பரியம் மாறாமல் நடப்பது. ஊர் மக்கள் திரண்டு நிற்க வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்குவதுதான் அழகு. அதுதான் வீரம்.























