தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் லதா ஆதிக்கு போன் போட்டு “ஒரு முக்கியமான ஆள் வந்து இருக்காங்க, வெளியே வந்து பாருங்க” என்று சொன்னதும், பாரதியை பார்த்த ஆதி சந்தோஷப்படுகிறான். உள்ளே போன பாரதி இன்டர்வியூ அட்டென்ட் பண்ண, ஆதி “செலெக்டட் யு ஆர் அப்பாயிண்ட்டட்” என்று கூறினான்.
மேலும் பாரதி எழுந்து வரும்போது அவளை கூப்பிட்டு வைத்து “இதுக்கு முன்னாடி இருந்தவங்க ரொம்ப கோபப்படுவாங்க, ஆனா நீங்க அப்படி இருக்கக் கூடாது, அவங்க தினமும் எனக்கு லன்ச் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க, நீங்களும் அப்படி எடுத்துட்டு வரலாம்” என்று ட்விஸ்ட் கொடுக்கிறான்.
தொடர்ந்து வீட்டுக்கு போன ஆதி அம்மா சாரதாவுக்கு பிறந்தநாள் என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறான். பிறகு தமிழ் பாப்பா போன் பண்ணி பேச அவளிடம் அம்மாவுக்கு பிறந்தநாள் என்ற விஷயத்தை சொல்ல தமிழ் அதை பாரதியிடம் சொல்கிறாள். இப்படியான சூழலில் இன்றைய எபிசோடில் நடந்ததைப் பார்க்கலாம்.
அதாவது, மறுநாள் காலையில் வீட்டில் எல்லோரும் சாரதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றனர். மறுபக்கம் ஆபிஸ் வந்த பாரதி ஆதி வருவதற்கு முன்பாக சாரதாவின் பிறந்த நாளை கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறாள்.
ஆபிஸ் வந்த ஆதி பாரதி செய்த ஏற்பாடுகளை பார்த்து சந்தோஷப்படுகிறான். அதனை தொடர்ந்து ஆதியை வைத்து கேக் வெட்டிக் கொண்டாட பாரதி அதை வீடியோ காலில் காட்ட சாரதா சந்தோஷப்படுகிறார். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Cinema Headlines: அயலான் மூன்றாவது பாடல் ரிலீஸ்.. வடக்குப்பட்டி ராமசாமி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சினிமா ரவுண்ட்-அப்!
12th Fail Review: “கல்வியும் நேர்மையும் தான் மனிதனின் அடையாளம்” .. உரக்க பேசிய “12th Fail” படம்.. முழு விமர்சனம் இதோ..!

























Этот краткий обзор предлагает сжатую информацию из области медицины, включая ключевые факты и последние новости. Мы стремимся сделать информацию доступной…