கடந்த 10 ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் உக்கிரம் அடைந்துள்ளது. தினந்தோறும், அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கலவரங்கள் வெடித்து வருகின்றன.
மத நல்லிணக்கத்தை போதிக்கும் சம்பவம்:
இதனால், இஸ்லாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருகிறது. இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. வீதிக்கு நடுவே இஸ்லாமியர் ஒருவர் தொழுகை செய்துள்ளார். அவருக்கு சீக்கியர் ஒருவர் குடை பிடித்த சம்பவம் பார்ப்போரை நெகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம், பதற்றமான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் அன்பையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
நெகிழ்ச்சி வீடியோ:
எஸ்க் வலைதளத்தில் இதுகுறித்து பயனர் குறிப்பிடுகையில், “இந்த சகோதரத்துவம் மிகவும் அழகாக உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது. ஜம்மு காஷ்மீரில் ஆலங்கட்டி மழையின் போது தொழுகையை செய்து கொண்டிருந்த ஒரு முஸ்லீம் சகோதரருக்கு ஒரு சீக்கிய சகோதரர் குடையை பிடிக்கிறார். மரியாதையும் பாராட்டுக்களும்” என பதிவிட்டுள்ளார்.
This brotherhood is most beautiful & most powerful 💓A #Sikh_brother provides his Umbrella to a Muslim brother who was PRAYING the jumma #prayer during #hailstorm in kashmir Jammu !#Respect & appreciations! pic.twitter.com/TzWdwvBwHB
— Ali 🇮🇷 🇾🇪 🇵🇸 🇱🇧 (@mehboob_ali72) February 2, 2024
மற்றோர் பயனர் இதுகுறித்து குறிப்பிடுகையில், “ஐஐடி ஜம்மு அருகே ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இஸ்லாமியர் ஒருவர் தொழுது கொண்டிருந்தார். முஸ்லீமை பாதுகாக்க சீக்கியர் ஒருவர் குடையுடன் விரைந்தார். அழகான காட்சி” என பதிவிட்டுள்ளார்.
“ஜம்மு சாலையோரத்தில் நமாஸ் செய்து கொண்டிருந்த முஸ்லீமை ஆலங்கட்டி மழையில் நனையாதவாறு குடை பிடிக்கசீக்கியர் ஒருவர் அவரை நோக்கி விரைகிறார். வீடியோவைப் பார்த்தேன். குருநானக் தேவின் கூற்று எனக்கு நினைவுக்கு வருகிறது. எல்லா மனிதர்களையும் சமமாக மதிப்பவனே மதத்தை பின்பற்றுபவன்” என மற்றோர் பயனர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Ladakh : முற்றிலும் முடங்கிய லடாக்.. மாநில அந்தஸ்து கோரி வெடித்த போராட்டம்!
மேலும் காண