கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என, தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி வேதனை:
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ““நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால், கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
“நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 29, 2024
கீழ்வெண்மணியில் ஆளுநர் ரவி:
நாகப்படினத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் ரவி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்குச் சென்று நேற்று பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து, கீழ்வெண்மணி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். இதுதொடர்பாக வெளியிட்டு இருந்த டிவிட்டர் பதிவில், ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, ‘1968’ படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்” என ஆளுநர் ரவி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான், கீழ்வெண்மணியில் உள்ள நினைவுச் சின்னங்களை விமர்சித்துள்ளார். மேலும், நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியவில்லை என, மாநில அரசையும் விமர்சித்துள்ளார்.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…