எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை கைது செய்தனர். 5 விசைபிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 நாட்களில் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…