உலகிலேயே முதன்முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கான ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கியுள்ளது.
அடிஸோலிசூமாப் எனப்படும் இந்த ஊசி மருந்தைச் செலுத்திய ஏழே நிமிடங்களில் இந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று இந்த மருந்தைக் கண்டறிந்த இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை எனப்படும் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தோலுக்கு அடியில் செலுத்தக்கூடிய இந்த ஊசி மருந்தால், புற்றுநோய்க்கான சிகிச்சை காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊசி மூலம் புற்றுநோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடியும் என தேசிய சுகாதார சேவை அமைப்பின் மருத்துவர் அலெக்சாண்டர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த ஊசி மருந்துக்கு அங்கீகாரம் கேட்டு
விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.