Election Commission wants AAP to change its poll campaign song for slams bjp and intelligence agency


தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரப் பாடலான ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’ பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது. மேலும், இப்பாடலை மாற்றியமைக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 
ஆம் ஆத்மி பாடலுக்கு தடை:
கடந்த 25 ஆம் தேதி, டெல்லியில் மையமாக கொண்டு செயல்படும் ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலான  ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’  வெளியானது. சுமார் 2 நிமிடம் கொண்ட இப்பாடலை,  ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ திலீப் பாண்டே எழுதியுள்ளார். 
இந்தப் பாடலானது, பாஜக கட்சியையும், புலானாய்வு அமைப்புகளையும்  தவறான நோக்கில் குறிப்பிடுப்படுவதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் , டெல்லி முதலமைச்சர் சிறையில் இருப்பது போன்ற காட்சிகள் நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாகவும், இந்த பாடலை மாற்றியமைக்குமாறு, தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மேலும், இந்த முடிவை கட்சி ஏற்கவில்லை என்றால், மாநில அளவிலான ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

”பாஜக செய்தால் சரியா?”
இந்நிலையில், ஆம் ஆத்மி பாடல் தடை குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் ஆதிஷி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலானது பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  எங்கள் பாடலில் பாஜக பெயர் இடம் பெயரவில்லை. சர்வாதிகாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது, பாஜக கட்சியை கூறியதாக எடுத்துக் கொள்கிறார்களா என கேட்டார்.
ஒரு கட்சியின் பரப்புரை பாடலுக்கு தடை விதிப்பது , இதுவே முதல் முறை. பாஜக , தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால், அக்கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதை உணர்த்துகிறது என அமைச்சர்  ஆதிஷி கண்டனத்தை பதிவு செய்தார். 
Also Read: UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேலும் காண

Source link