சென்னை அணி

Last Updated:

சிஎஸ்கே அணி தற்போது விளையாடியுள்ள 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

சென்னை அணி
சென்னை அணி

ஐபிஎல் 2026 நடப்பு சீசனில் மிக முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. ப்ளே-ஆஃப் (Playoffs) சுற்றுக்கான பந்தயத்தில் நீடிக்க வேண்டும் என்றால் சென்னை அணிக்கு இது ‘வாழ்வா-சாவா’ போட்டியாகும்.

சிஎஸ்கே அணி தற்போது விளையாடியுள்ள 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தினால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க முடியும்.

அதுமட்டுமன்றி, பஞ்சாப், கொல்கத்தா, மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தங்களின் கடைசிப் போட்டிகளில் தோற்க வேண்டும் என்றும், சென்னை அணியின் நெட் ரன் ரேட் (NRR) ராஜஸ்தான் அணியை விட உயர வேண்டும் என்றும் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்து காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சிஎஸ்கே உள்ளது.

மறுபுறம், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் வலுவாக உள்ளது. இருப்பினும், முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதற்கான கடுமையான போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகளுடன் குஜராத் மோதி வருவதால், இந்த ஆட்டத்தில் சென்னைக்கு அவர்கள் கடுமையான சவாலை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தொடர் முழுவதும் சிஎஸ்கே அணி முக்கிய வீரர்களின் காயம் காரணமாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி, ஏற்கனவே கணுக்கால் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கட்டைவிரல் காயம் காரணமாக இன்றைய கட்டாய வெற்றிப் போட்டியில் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த இமாலயப் போட்டியில் சென்னை அணி வென்று தங்களின் ப்ளே-ஆஃப் கனவைத் தக்கவைத்து கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பில் சென்னை அணியின் ரசிகர்கள் உள்ளனர்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed