Cinema Headlines today april 7th today Tamil cinema news vettaiyan jackie chan vijay antony thangalaan


வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் ஜாக்கி சான் இன்று தன் 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காமெடி கலந்த அசாத்திய ஆக்‌ஷன், துள்ளலான நடிப்பு, உடல்மொழி குங் ஃபூ கலை என தனி ஸ்டைலில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான ஜாக்கி சானின் வயதான தோற்றம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவலை கொள்ள வைத்தது. இதற்கு பதிலளிக்கும்படி உருக்கமான பதிவு ஒன்றை ஜாக்கி சான் ரசிகர்களுடன் இன்று தன் பிறந்தநாளில் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபரில் ரிலீஸ்.. மாஸ் அப்டேட் தந்த லைகா!
ஜெய் பீம் பட்த்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் த.செ.ஞானவேல் உடன் ரஜினிகாந்த் கைகோர்த்துள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). லைகா ப்ரொடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , ராணா டகுபதி, நடிகைகள் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிடிக்கலனா கண்ண மூடிக்கோங்க.. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை விமர்சித்த ரஞ்சித்துக்கு விஜய் ஆண்டனி பதில்!
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் ரோமியோ. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.  இந்நிலையில் இப்படக்குழு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது நடிகர் ரஞ்சித்தின் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு பற்றிய கருத்து பற்றி விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கோலார் சுரங்கத்தில் கங்கம்மாவாக பார்வதி.. தங்கலான் படக்குழு பகிர்ந்த சிறப்பு போஸ்டர்!
தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போவதால் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நடிகை பார்வதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டுல தான் கண் விழிக்கிறேன்.. ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை சிலாகித்த செல்வராகவன்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் செல்வராகவன் சமீபத்திய ஆண்டுகளில் நடிகர் அவதாரமும் எடுத்து கலக்கி வருகிறார். மற்றொருபுறம் தன் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவ்வாக தன் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் ஒன்றைப் புகழ்ந்து மெய்சிலிர்த்துப் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண

Source link