தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் முக்கிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 1,15,523 பெண் வாக்காளர்கள், 1,06,875 ஆண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,22,406 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தாராபுரம் தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் 3,500 போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைத்து காண்காணிப்பட இருக்கின்றன. அக்டோபர் -9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

























Solid value packed into a relatively short post, that takes skill, and a look at walnutcoveartisanhouse continues the dense useful…