BJP Appoints In-charges For Tamil Nadu Ahead Of Parliamentary Elections | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல்

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு, இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.
தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த பாஜக:
நாடாளுமன்ற மக்களவ தேர்தல் தொடர்பான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்துவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும், பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளன. திமுக தனது முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் நாளை, தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த பாஜக:
இந்நிலையில் தான், மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டுகிறது. இதையோட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், மாநில மற்றும் யூனியர் பிரேதசங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பீகார், உத்தரபிரதேசம், கோவா, ஜார்கண்ட் உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும்  தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதில், தமிழகத்திற்கும் இரண்டு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda ने आगामी लोकसभा चुनाव के लिए निम्नलिखित राज्यों में प्रदेश चुनाव प्रभारी एवं सह-चुनाव प्रभारी की नियुक्ति की है। pic.twitter.com/1hpPH4cNsa
— BJP (@BJP4India) January 27, 2024

தமிழகத்திற்கான பொறுப்பாளர்களை நியமித்த பாஜக:
பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டிற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த குழு விரைவில் சென்னை வந்து, மாநில தலைமையுடன் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பாஜக தலைமையில் மாநிலத்தில் கூட்டணி அமைப்பது அல்லது தனித்து போட்டியிடுவது உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதேநேரம், மாநில அரசியல் சூழலுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து, தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link