தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை )
உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 
சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘புதியன புகுதல்’ என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.

தீயவை போக்கும் போகி 

புராணங்களின் படி, மழை, சூரியக் கடவுளை கொண்டாடும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேளாண்மை செழிக்க விவசயிகள் இறைவனிடம் வேண்டும் வழிபாடு. கலப்பை, உழுமாடு பிற விவசாய உபகரணங்களையும் வணங்குவார்கள். ஆண்டு முழுக்க வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், மாடுகளுக்கு வாங்கிய வைக்கோல் மற்றும் பயனற்ற வீட்டுப் பொருட்களை தீயிலிட்டு எரிக்கிறார்கள்.

 
போகியன்று வீட்டை சுத்தம் செய்வார்கள். பொங்கல் திருவிழாவுக்கு தயாராகும்விதமாக வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பழக்கமும் இருந்தது. ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளை அடிப்பார்கள். போகியன்று தீயிட்டு எரிக்கும் பொருட்களுடன் எதிர்மறையான எண்ணங்களை தீயுடன் சேர்த்துவிடலாம். போகி நாளில் புத்தாடை அணிந்து கொண்டாடுவர்.
 
சிறுவர்,சிறுமியர் மேளம் அடித்து போகி  பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
 
அந்த வகையில் மார்கழி மாதத்தில் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை காஞ்சிபுரம் பகுதியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம்  நகர மக்கள் அதிகாலை நேரத்திலேயே குடும்பத்துடன் எழுந்து போகியை கொண்டாடினர். மேலும் சிறுவர் சிறுமியர்களான மேளம் அடித்து போகிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தைப்பொங்கலை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

இதேபோன்று,செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் புகையில்லா போகி கொண்டாடப்பட்டது இப்பகுதி கிராம மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பழைய பொருட்களான துணி,பாய், தலையணை, உள்ளிட்ட பழைய பொருட்களை போகியில் போட்டு எரித்து பழையன கழிதலும் புதிதன புகுதலும் போகி பண்டிகையை சிறுவர்கள் போகி மேலும் அடித்து கொண்டாடினர்.

என்னென்ன செய்யலாம்? 

போகிப் பண்டிகையன்று தெய்வங்களை வழிபடும் வழக்கம் உள்ளது. அன்றைக்கு வீடுகளில் விளக்கேற்றி வழிபடலாம்.
மழைக்காலம் முடிந்து குளிர்காலம் என்பதால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகமிருக்கும் காலம் என்பதால் நோய்த்தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
போகி அன்று போளி, பாயசம் உள்ளிட்ட சமையல் செய்து இறைவனை வழிபடலாம். 
போகி அன்று மதியத்திற்கு சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும். முந்தைய நாளில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கிவிடலாம். அப்போதுதான் மறுநாள் பொங்கல் கொண்டாட முடியும்.
தீய எண்ணங்கள், பழக்கங்களை கைவிட முயற்சி செய்யுங்கள்.
நன்மைகளே சூழட்டும்.

 

Source link


Latest News

View All

  1. Если вам требуется качественный [url=https://remont-dvig124.ru]Ремонт мотор[/url], обращайтесь к профессионалам. Благодаря этому мотор прослужит дольше и будет работать без сбоев.

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed