BB Tamil 10 : எஸ்கேப் ஆன போட்டியாளர்; வைல்டு கார்டு என்ட்ரிக்கு ஓகே?! - கடைசி நாளில் நடந்ததென்ன? | news about last minute twists of bigg boss tamil 10 inauguration


விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.

மேலும் எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில், பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ட் ஆகி அறிமுக மேடையிலிருந்தபடியே வெளியேறினர்.

இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக மேலும் சிலரது பெயர்கள் அடிபட்டன.

ஜான் விஜய், ஆல்யா மான்சா, ஜாய் கிறிசில்டா, ஆனந்தி என நீண்டது இந்தப் பட்டியல். இவர்களில் ஜாய் கிறிசில்டா குழந்தையை விட்டுச் செல்ல இயலாது என்பதால் தான் செல்லவில்லை என அவரே அறிவித்து விட்டார்.

ஆனால் ஸ்டேஜ் எவிக்‌ஷன் இருப்பதாகவும் அதில் தான் வெளியேற்றப்படலாமென நினைத்ததாலும்தான் அவர் செல்ல வேண்டாமென முடிவெடுத்ததாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

ஜாய் கிறிசில்டா

ஜாய் கிறிசில்டா

ஜான் விஜய், ஆல்யா மானசா நிலைமை குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனந்தி விஷயத்தில் அவர் நிகழ்ச்சிக்குக் கிளம்புவதற்கு ஆயத்தமாகி விட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் அது மாறியதாம்.

அதாவது முதல் நாளில் செல்லாமல், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம்  செல்லும்படி அவரை வலியுறுத்தியுள்ளார்களாம்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed