<p>ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். </p>
<p>நாளை நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள புரப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது, ”நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார். </p>