சர்வதேச அளவில் கிரிக்கெட் மீதான மோகத்தினை அதிகப்படுத்திய அணி என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் அணிதான். அந்த அணி குறித்து இன்றுவரை உள்ள பொதுவான அபிப்ராயம் “ வெஸ்ட் இண்டீஸ் டீம்லதான் 11 பேரும் பேட்ஸ்மேன்ஸ்” என்பதுதான்.

வெஸ்ட் இண்டீஸ்:

ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் ஒரு அணி வெற்றி பெற கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் தேவை என்றால் அணியில் இருக்கும் முக்கிய விக்கெட்டுகள் அனைத்தும் வீழ்த்தப்பட்ட பின்னரும், கடைசி விக்கெட்டாக களத்தில் ஏதேனும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் இருந்தால் அவரால் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட முடியும் என்ற நம்பிக்கை தானாக எழுந்தி விடுகின்றது. இப்படியான நம்பிக்கையை ஏற்படுத்தும் அணி வீரர்களால் ஒரு அணியாக தற்போது சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அதிலும் சர்வதேச போட்டியோ அல்லது ஐசிசி போட்டிகளோ வெஸ்ட் இண்டீஸ் அணி மீது மற்ற அணிகளுக்கு உள்ள எண்ணம், டி20 போட்டி என்றால் அதிக கவனம் தேவை. அதுவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என்றால் நாமெல்லாம் எதுவும் செய்யத்தேவையில்லை, அவர்களே நமக்கு வெற்றியை பெற்றுத்தந்துவிடுவார்கள் எனும் அளவிற்கு இவர்களது ஆட்டம் உள்ளது.

27 ஆண்டுகளுக்கு பின் வெற்றி:

அதேபோல் கிரிக்கெட்டில் கடந்த சில சதாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் அணி ஆஸ்திரேலியா. இந்த அணி தனது நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கோப்பையை தட்டி வரும் வல்லமை படைத்தவர்களாக உள்ளனர்.

இப்படியான ஆஸ்திரேலியா அணியின் சொந்த மண்ணில் அவர்களை 27 ஆண்டுகளுப் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அட்டவணைப் படுத்தப்பட்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.

திரில் வெற்றி:

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு, 216 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஆட்டநாயகன் விருது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமர் ஜோசப்க்கு வழங்கப்பட்டது. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Picked something concrete from the post that I will use immediately, and a look at autumnmeadowvendordistrict added another concrete piece,…
Honest assessment after reading this twice is that it holds up under careful attention, and a look at berrycovevendoratelier extended…
Liked that there was nothing performative about the writing, and a stop at loungeneon continued that genuine quality, performative writing…
My usual pattern is to skim and bounce but this site has reset that pattern temporarily, and a stop at…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

எலெக்ஷன் கமிஷன் மீட்டிங் வித் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: தேர்தல் கமிஷன்: 240 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சந்திக்க தயாராக இருந்தது ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் சந்திக்கவில்லை | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Cbi Raids Cm Bhagwant Mann: CBI raids CM Bhagwant Mann’s camp office, OSD’s home in graft prob | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது பாஜகவின் விரக்தியின் விளைவு: ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

சாலைகள், ரயில், துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து ஆகியவற்றை ஒரே திட்டமிடல் கட்டமைப்பின் கீழ் கொண்டு வர புதிய அமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘வழக்கத்திற்கு மாறான கோரிக்கை’: ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஏன் சந்திக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸின் $5.35 மில்லியன் ஓஹியோ மாளிகையின் தனியுரிமை வேலி ஏரி ஏரி காட்சிகள், இயற்கையை ரசித்தல் மற்றும் பகிரப்பட்ட கழிவுநீர் பாதை ஆகியவற்றின் மீது அண்டை நாடுகளின் கவலைகள் இருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்டது; 3.5 ஏக்கர் நிலத்தில் 1,190 அடி வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது | ACTPnews.com

Came away with some new perspectives I had not considered before, and after blissbrick those ideas felt more complete, the…