R. Sundararajan: நடிகரும், இயக்குநருமான ஆர். சுந்தரராஜனிடம் காருக்குள் குடும்பம் நடத்தியதாக அவரது மனைவி துர்கா தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆர். சுந்தரராஜன். ராஜாதி ராஜா, பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், திருமதி பழனிசாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன். விஜயகாந்த், ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த நடிகர் சுந்தரராஜன், 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி உள்ளார்.
சூரியவம்சம், ஜானகிராமன், நட்புக்காக, பெரியண்ணா போன்ற திரைப்படங்களில் ஆர். சுந்தரராஜனின் கேரக்டர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. கடைசியாக, சித்திரையில் நிலாச்சோறு என்ற படத்தை இயக்கி அதில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை என்ற கேரக்டரில் ஆர்.சுந்தர்ராஜன் நடித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தரராஜன் உடனான வாழ்க்கை குறித்து அவரது மனைவி துர்காபேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பல ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக இருந்த துர்கா, “5000 படங்களுக்கு மேல் நான் டப்பிங் பேசி இருக்கிறேன். அந்த டயலாக் எல்லாம் எனக்கு நினைவில் உள்ளது. அப்போது எல்லாம், சின்ன பிள்ளைகளுக்கு பெரியவர்கள் தான் டப்பிங் கொடுப்போம். பூவே பூச்சூடவா படத்தில் நதியாவுக்கு டப்பிங் பேசியுள்ளேன். அம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கும், முதல்வன் படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு டப்பிங் பேசியுள்ளேன். நான் டப்பிங் பேசுவதற்கு என் அம்மாவோ, என் கணவரோ எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளை என் அம்மா தான் பார்த்துக் கொள்வார்கள்.
ஆரம்பத்தில் என் கணவர் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவருக்கு பொள்ளாச்சியில் ஷீட்டிங்கில் இருப்பார். அடுத்த நாள் பெங்களூருவில் இருப்பார். நானும் பிசியாக டப்பிங் பேசிக் கொண்டிருப்பேன். அதிகமாக நாங்கள் இருவருமே சந்தித்து கொண்டு பேசியதில்லை. ஆரம்பத்தில் சுந்தரராஜன் வீட்டிற்கு வரும்போது குழந்தைகளை பார்த்து விட்டு, என்னை பார்க்க டப்பிங் ஸ்டுடியோவுக்கு வருவார். நான் வரும் வரை வெளியில் காரில் காத்திருப்பார். அதுவரை 15 நாட்களில் நடந்தது எல்லாவற்றையும் காரில் இருந்தபடி தான் நாங்கள் இருவரும் பேசுவோம். எங்களுக்குள் நடைபெறும் குடும்ப பிரச்சனைகள் குறித்தும் காரிலேயே விவாதம் நடக்கும்” என துர்கா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண