7 Am Headlines today 2024 March 26th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9,10,024 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
பாஜகவும் வாக்களிப்பது அவமானம்; எதிர்கால சந்திக்கும் செய்யும் துரோகம் – முதலமைச்சர் ஸ்டாலின்.
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிப்பு.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கதபர்ட் வேட்பாளராக அறிவிப்பு.
நாம் தமிழர் கட்சிக்கு தீப்பெட்டி அல்லது கப்பல் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தின் சீமான் மனு.
வாளி, பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு.
இராமநாதபுரம்: ஓபிஎஸ் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மற்றொரு வேட்பாளர் போட்டி.
தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல்.
சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனுத் தாக்கல்.
சென்னை கிண்டியில் சோதனையில் பிஸ்கட் ஏஜென்சி ஊழியர்களிடம் ரூ. 40 லட்சம் பறிமுதல்.
கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழப்பு.
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல்.
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணுக தடையில்லை – உயர்நீதிமன்றம்.
வேங்கைவயல்: 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு அனுமதி

இந்தியா: 

இந்தியாவை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக மாற்றியுள்ளது பாஜக – காங்கிரஸ் குற்றச்சாட்டு.
ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் 30 ஆண்டுக்குபின் பட்டியலின மாணவர் வெற்றி.
தேர்தல் பத்திர பிரச்சனையை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது – கேரளா முதல்வர் பினராயி விஜயன்.
ஜனநாயத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் காப்போம் என ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம்.
கட்சி விளம்பரத்தில் இந்து கடவுள்கள் படம் – பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் புகார்.
பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் சி.இ.ஓ டேவ் கால்ஹூன் பதவி விலகுகிறார்.
சிக்கிம் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் 2 தொகுதிகளில் போட்டி.
கங்கை, யமுனை மாசுபாடு: டெல்லி, உத்தரபிரதேசம், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க உத்தரவு.
மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி செலவிடும் என மதிப்பீடு.
டெல்லி: கோவிந்த்புரியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா மனைவிக்கு சொந்தமாக கார் திருட்டு.   

உலகம்: 

தொடரும் பொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு.
காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம்; ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்.
உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் – 30 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.   

விளையாட்டு: 

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் இன்று மோதல்.
ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியான நிலையில், சென்னையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 

Published at : 26 Mar 2024 06:58 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link