சென்னை மற்றும் சென்னை புறநகரில் இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கடை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கமாக செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வார இறுதி நாளான இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..
தென் சென்னை மக்களவைத் தொகுதி – எந்த கட்சிக்கு சாதகம்? இதுவரை சாதித்தது யார்? தேர்தல் வரலாறு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். அந்த வகையில் மாநிலத்தின் மூன்றாவது தொகுதியான, தென்சென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக அலசி ஆராயலாம். மேலும் படிக்க..
நிறைவேறுமா விவசாயிகள் கோரிக்கை? இன்று மத்திய அரசுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது போன்ற, ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் பேரணியாக செல்லும் நோக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு குழுக்களாக டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். ஆனால், டெல்லி எல்லைப்பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகள் உள்ளே வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலால் விவசாயிகள் குவிந்துள்ள பகுதிகளில் பதற்றமுடனே காணப்படுகிறது. மேலும் படிக்க..
ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல்! தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட் – கண்காணிப்பு தீவிரம்!
உலக நாடுகள் அவ்வப்போது ஏதாவது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினாலும் இன்னும் கொரோனா வைரஸ் மீதான அச்சமும், மற்ற வைரஸ்கள் ஏதாவது பரவிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தான், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் படிக்க..
விமர்சனங்களை ஏற்ற விஜய்..! கட்சி பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என திருத்தி அறிவிப்பு
நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். மேலும் படிக்க..