கடந்த 2022ஆம் ஆண்டு, கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கார் குண்டுவெடிப்புக்கு காரணம் யார்?

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை ஆட்சேர்ப்பது தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கோவையில் 12 இடங்களிலும் மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனையில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில், பல பொருள்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆறு மடிக்கணினிகள், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், ஆறு எஸ்டி கார்டுகள் மற்றும் மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிரடி சோதனையை தொடரும் என்ஐஏ:

அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி நடந்ததுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. மெட்ராஸ் அரபிக் கல்லூரி மற்றும் கோவை அரபிக் கல்லூரியில் அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி பயங்கரவாத சித்தாந்தங்கள் ரகசியமாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

இதனால், மெட்ராஸ் அரபிக் கல்லூரி மற்றும் கோவை அரபிக் கல்லூரிக்கு தொடர்புடைய 11 இடங்களில் இன்று என்.ஐ.ஏ சோதனை நடத்தியுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு, "அரபு வகுப்புகளை தவிர ஆன்லைன் வழியாகவும் பயங்கரவாத சித்தாந்தங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் வழியாகவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் கிலாபத் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு விரோதமாக பிரச்சாரம் செய்துள்ளனர்.

2022 அக்டோபரில் நடந்த கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரும் கோவையில் உள்ள கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, கொழும்பு தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில், 250 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்திய இலங்கை பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமை கோவையில் கைதானர்கள் பின்பற்றி வந்துள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…