வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!
மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. மேலும் படிக்க
UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!
விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும். இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. மேலும் படிக்க
CM Stalin Slams BJP: மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் விரும்பாத பிரதமர் மோடி : முதல்வர் ஸ்டாலின் சாடல்
டெல்லி ஐந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். மேலும் படிக்க
BJP White Paper: காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நிலை! வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தெரிவித்துள்ளதாவது, பிரதமர் மோடி பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது எனவும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் குறைந்த அளவில்தான் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க
Hemant Soren: ஜார்க்கண்டில் திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்கும் இடையே தொடர்பா? அதிர்ச்சி தகவல்
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும், கடந்தாண்டு வருமான வரித்துறை சோதனையில் ரூ.351 கோடியுடன் சிக்கிய காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாஹூவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
மேலும் காண

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…