தமிழ் சினிமாவுக்கு விரைவில் விஜய் முழுக்கு போட உள்ள நிலையில் அவருடைய இடத்துக்கு யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
இளைய தளபதி டூ தளபதி 
நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். தொடக்க காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் ரசிகர்களால் “இளைய தளபதி” என கொண்டாட்டப்பட்டார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரசிகர்களால் தளபதி விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் உள்ளார். வியாபார ரீதியில் பார்த்தால் அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவுக்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளார். 
நடிகர், பாடகர், தயாரிப்பாளர், சிறந்த நடனம் ஆடுபவர் என பல திறமைகளை கொண்ட விஜய் தான் தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பிரபலங்களில் முதன்மையானவர். அதை பெரும்பாலும் எந்த பிரபலமும் மறுத்தது இல்லை. அந்த அளவுக்கு அனைவரையும் தனது வசீகரத்தால் கவர்ந்தார். 
அரசியல் களம் 
இப்படியான நிலையில் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல்கள் எல்லாம் வந்த வண்ணம் இருந்தது. தொடர்ச்சியாக அதற்கேற்றவாறு பல சம்பவங்களை அவர் நிகழ்த்தி காட்டிக் கொண்டே வந்தார். இந்நிலையில் தமிழக மக்கள் கழகம் என்ற கட்சியை தான் தொடங்கப் போவதாக விஜய் அறிவித்து விட்டார். மேலும் இன்னும் ஓரிரு மாதங்களில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவோ, எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவோ போவதில்லை. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் கட்சி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார். 
அதேசமயம் தளபதி 68 படத்தில் நடித்து வரும் தான், 69வது படம் முடித்ததும் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யை சினிமாவில் இனிமேல் பார்க்க முடியாதா? என பலரும் ஃபேர்வெல் போஸ்ட்டுகளை சமூக வலைத்தளங்களில் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 
சிவகார்த்திகேயனுக்கு இடமா? 
இந்நிலையில் சினிமாவில் விஜய்யின் இடத்தை யார் பிடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் பலரும் சிவகார்த்திகேயன் பெயரை டிக் அடித்துள்ளனர். சொல்லப்போனார் இன்றைய காலக்கட்டத்தில் விஜய்க்கு அடுத்தப்படியாக அனைவருக்கும் பிடித்த நடிகராக சிவகார்த்திகேயன் தான் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருக்கையில் விஜய் இடத்தை பிடிக்க பலருக்கும் ஆசை இருக்கும். போட்டி போடும் எண்ணமும் இருக்கும். ஆனால் வெற்றி பெற போகிறவரை காலம் தான் முடிவு செய்யும்…! 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed