ப்ரோ கபடி லீக்:
10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
 
தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்:
நடப்பு ப்ரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 17  போட்டிகளில் 7ல் வெற்றி, 10ல் தோல்வி என 40 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
 
தமிழ் தலைவாஸ் அணி அதன் முந்தைய மூன்று ஆட்டங்களில் அபாரமாக வெற்றி பெற்றது. பெங்களூரு புல்ஸ் அணியை 28-45 என்ற கணக்கிலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29-54 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் தான் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது தமிழ் தலைவாஸ் அணி. இன்றைய போட்டியின் வெற்றியின் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் ரெய்டர்கள் அர்ஜூன் மற்றும் அஜித் குமார் இருவரும் அருமையாக விளையாடி தங்கள் அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர். அதன்படி, அர்ஜூன் 13 புள்ளிகளையும் அஜித் குமார் 9 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர். 
 
தமிழ் தலைவாஸ்:
Raid points: 18
Super raids : 1
Tackle points: 9
All out points: 0
Extra points: 0
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்:
Raid points: 24
Super raids : 1
Tackle points: 14
All out points: 4
Extra points: 0
 
 
 
 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed