தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே பல மாதங்களாக கசிந்து வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் இப்படம் குறித்த பல தகவல் வெளியான வண்ணமாக இருக்கின்றன. இது தல ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது.

மார்க் ஆண்டனியின் வெற்றி :

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்குமே சிறப்பான கம்பேக் படமாக அமைந்தது. அந்த வகையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை இயக்கப்போகிறாரா? என்ற அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தனஞ்செயன் சொன்ன குட் நியூஸ் :

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணி குறித்த முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். "மார்க் ஆண்டனி படம் வெளியான பிறகு நான் அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லும் போது மார்க் ஆண்டனி படம் ரொம்ப சூப்பரா வந்து இருக்கு பா. பாரு இந்த படம் பார்த்துட்டு அஜித் சார் உனக்கு ஓகே சொல்லிடுவாரு என ஒரு வாழ்த்தாக நான் சொன்னேன். நம்பமாட்டீங்க அவரே எனக்கு போன் செய்து நீங்க எனக்கு வாழ்த்து சொன்ன மாதிரியே எல்லாம் நல்ல படியா நடந்துகிட்டு இருக்கு. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் அப்படினு சொன்னார்". எனவே கூடிய விரைவில் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி சேரும் படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

வைரலாகும் தகவல் :

மேலும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் நடிகர் அஜித்துடன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ‘ படத்தில் இணைந்து நடித்த நடிகை தபு நடிக்க உள்ளார் என்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் வில்லனாக நடிக்க எஸ்.ஜே. சூர்யா அல்லது அரவிந்த்சாமியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என சில தகவல்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Granted my mood today might be elevating my reading experience but I still think this is genuinely good, and a…
Если запой продолжается много дней, больной страдает хроническими болезнями или уже переносил алкогольный психоз, вызов врача особенно важен. В тяжелом…
The use of plain language without dumbing down the topic was really well done, and a look at snowcoveartisanbazaar continued…
Этот обзор посвящен успешным стратегиям избавления от зависимости, включая реальные примеры и советы. Мы разоблачим мифы и предоставим читателям достоверную…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

பங்களா சாஹிப்பின் புனிதத்தை சீர்குலைத்ததற்காக கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மீது குருத்வாரா அமைப்பு புகார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பார்க்கவும்: சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் டெல்லி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை கைது செய்ய முயன்றனர் இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘சட்டவிரோத தடுப்புக்காவல் இல்லை, இணையத்தை மீட்டெடுக்கவும், மெட்ரோ சேவைகளை மீட்டெடுக்கவும்’: டெல்லி போராட்டத்தின் ஒடுக்குமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் – மேல் மேற்கோள்கள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘ஸ்டார்லிங்க் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’: மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பதில் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘சீக்கியர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டன’: குருத்வாரா அமைப்பு போராட்டக்காரர்கள், வளாகத்திற்குள் ஊடுருவிய காவல்துறையிடம் கேள்வி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи. Ознакомиться с деталями – [url=https://vvivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/]vvivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/[/url]