திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்கு முன் என்ன சொன்னார்கள்… `விஜய்க்கு பின் எல்லா சிறுத்தைகளும் போய்விட்டார்கள். அவருடன் இருக்கும் பொறுப்பாளர்கள் எல்லாம் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என்று பரப்பினார்கள்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூடாரமே காலி… எல்லோரும் விஜய்யின் பின் சென்றுவிட்டார்கள் என்றனர். அந்த விஜய் உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த ஒரு மணி நேரத்தில் போன் பண்ணி, ‘மிரட்டிட்டீங்க சார், Fire சார்’ என்று பாராட்டினார். இதனை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை.

எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ?… உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தி என்னை சோதனை செய்ய முயற்சிக்கிறீர்களோ? அதே விஜய் தனித்து நின்று, 108 இடங்களை வென்ற விஜய் உளுந்தூர்பேட்டை மாநாட்டை பாராட்டி பேசினார்.

திருமாவளவன்  - விஜய்
திருமாவளவன் – விஜய்

உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்கு பிறகு ஒரு பையனும் வாயைத் திறக்கவில்லை. அவர்களால் சொல்ல முடிந்த ஒரே வார்த்தை, மேடையில் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்பதுதான்.

அடங்க மறு என்று திருமாவளவன் சொன்னார். அதனால் அடங்க மறுத்துவிட்டார்கள். அடங்க மறு என்ற வார்த்தைக்கு பின்னால் இருக்கும் அரசியலை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link


Latest News

View All

  1. Решил сделать комплексный аудит сайта и не пожалел. Выявили слабые места, которые мешали сайту в поиске. seo аудит сайта стоимость…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed