அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தேவாலயம் ஒன்றில் காவிக்கொடி ஏற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ரூ.1800 கோடி செலவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று அங்கு நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். இதனிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் காவிக்கொடியுடன் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடும் சிலர் தேவாலயம் ஒன்றின் மீது காவிக்கொடி ஏற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பான கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில், இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. சம்பந்தப்பட்ட அந்த வீடியோ, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் ராணாபூரில் எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தப்தலை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தில் காவிக் கொடியுடன் வந்த சிலர், தேவாலயம் மீது ஏறியுள்ளனர். அங்கு நிறுவப்பட்டுள்ள சிலுவை மீது காவிக்கொடியை கட்டி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். அந்த சம்பவம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது.

Hey Ram .. will this be the new normal of our country #justasking pic.twitter.com/Hd2i8YxcAb

— Prakash Raj (@prakashraaj) January 22, 2024

இதுகுறித்து அந்த தேவாலயத்தின் போதகராக உள்ள நர்பு அமலியார் என்பவர் தெரிவிக்கையில், ‘வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்தபோது சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் உள்ளே நுழைந்தனர். அந்த கூட்டத்தில் குறைந்தது 25 பேர் வரை இருந்தனர். அவர்களில் சிலர் தான் ஆலயம் மீது ஏறி காவிக்கொடியை கட்டினர். அவர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு நன்றாகவே அந்த நபர்களை தெரியும். இப்படி செய்வது நல்லதல்ல என எவ்வளவோ சொன்னேன். மேலும் தேவாலயத்துக்கு வரும் மக்களை தொந்தரவு செய்யாதீர்கள் என சொன்னேன். ஆனால் அந்த நபர்கள் எதுவும் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுதொடர்பான ஜாபுவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின், ‘இந்த சம்பவத்தில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அது உண்மையில் தேவாலயம் கிடையாது. ஒரு தனிநபரின் வீடு என்பதால் வழக்கு எதுவும் பதியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Если интересует дизайном интерьера https://mebel-lotos18.ru открывает доступ к практическим материалам. В разделах публикуются советы по дому. Можно узнать на что…
https://intercom.help/bestpromo/en/articles/16579774-mostbet-promo-code-uzbekistan-2027-most888
dark markets https://sites.google.com/view/darknet-pulse-e8b2 darknet sites
darknet markets onion address dark market
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘கியானேஷ் குமாருக்கு முன்பே ECI அழுகல் தொடங்கியது’: பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆணையத் தலைவரை குறிவைத்தார், அசோக் லவாசா வழக்கை மேற்கோள் காட்டுகிறார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘பஞ்சாபில் முதல்வரின் மூக்குக்கு கீழ் ஊழல்’: தேர்தலுக்கு முன் ED ஏன் செயல்பட்டது என்று காங்கிரஸ் கேள்வி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘இறந்த மனநிலையால் அதிர்வு காண முடியாது’: ராகுலின் ‘செத்துப்போன பொருளாதாரம்’ கருத்துக்கு அமித் ஷா பதிலடி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

டென்னிஸ் ஐகான் சானியா மிர்சா செப்டம்பர் 27 அன்று நிவா பூபாவின் ‘ஆரோக்கியமான நகரங்களுக்கான நடை’க்கு தலைமை தாங்குகிறார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வீரமணி போக்ஸோ வழக்கு: ஜெம் கிரானைட்ஸ் தலைவருடன் டி.வி.கே அமைச்சரின் புகைப்படம்; ‘நடவடிக்கை எடுங்கள்’ என்று தி.மு.க இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

‘The Paradise’: ஸ்ரீகாந்த் ஒடேலாவின் படத்திற்கு கலவையான பதிலுக்கு நானி எதிர்வினையாற்றுகிறார், விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ‘குறைபாடுகளில் இருந்து கற்றுக்கொண்டேன்’ என்று கூறுகிறார்: ‘உங்கள் எல்லா அன்பையும் நான் பெற்றுள்ளேன், உங்கள் பெருங்களிப்புடைய ட்ரோல்களை சமமாக அனுபவித்தேன்’ | தெலுங்கு திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Если интересует рынок жилья https://ru-nedvizhimost.ru поможет найти объявлениям о недвижимости. В каталоге представлены комнаты. Во время поиска подходящего объекта рекомендуется…