மேலும், மத்திய அரசு உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய சில முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜி.எஸ்.டி சாலையில் செங்கல்பட்டு – திருச்சி பிரிவு, NH81 சாலையில் திருச்சி – பஞ்சப்பூர் – ஜெயங்கொண்டம் – கரூர் பிரிவு, கரூர் – கோயம்புத்தூர் பிரிவு ஆகியவற்றை 6 வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்வதுடன், NH87 சாலையில் மாதவரம் முதல் சோழவரம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும்.
இத்திட்டங்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிச் செயல்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆதரவாக அமையும். இவற்றுடன், மாண்புமிகு பிரதமரின் கவனத்திற்கு மேலும் சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைக்கின்றேன். மாநிலங்களுக்கு இடையே நீர் சமநிலையைக் கொண்டுவர நதிகள் இணைப்பு மிக மிக அவசியமாகும்.
தென்னிந்திய மாநிலங்களில் நீர் வளத்தைப் பெருக்குவதற்கு கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பாகும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்திற்கு முதன்மை முன்னுரிமை அளித்து, தேசியத் திட்டமாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியைப் பயன்படுத்த வழிவகை செய்யும் வகையில், இதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசின் பங்கான ரூ.5,110 கோடி நிலுவையில் உள்ளது. எந்தவித நிபந்தனைகளுமின்றி இந்தத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

























Данный факт гласит о срочной необходимости врачебного вмешательства для выведения из запоя в стационаре клиники и последующего квалифицированного лечения алкогольной…