தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்கு வந்து அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறது அ.தி.மு.க.

இரண்டில் தாராபுரத்தில் மட்டுமாவது வெற்றிபெறுவோம் எனக் காத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கின்றனர். அ.தி.மு.கவின் இந்தப் படுதோல்விக்குக் காரணம் என்ன?

இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே தாராபுரம் அ.தி.மு.கவுக்குச் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்பட்டது. த.வெ.க வேட்பாளர் சத்யபாமாவுக்கு எழுந்த எதிர்ப்பு, சமூக ரீதியான வாக்குகள், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் உள்ளிட்ட விஷயங்கள் அ.தி.மு.கவின் வெற்றிக்குக் கைகொடுக்கும் எனவும் சொல்லப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வியடைந்ததோடு, மூன்றாவது இடத்துக்கும் வந்திருக்கிறது. இந்தநிலையில், ”சரியான திட்டமிடல் இல்லாததே இந்தக் தோல்விக்குக் காரணம் என்கிறார்கள்” அ.தி.மு.க வட்டாரத்தில்.

இதுகுறித்து விபரமறிந்தவர்கள் பேசும்போது, “ஆரம்பம் முதலே மதுராந்தகம் தொகுதியை எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரியளவில் கண்டுகொள்ளவில்லை.

அவரின் கவனம் முழுவதும் தாராபுரம் தொகுதியின் மீதே இருந்தது. எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என நம்பினார். த.வெ.க சார்பில் சத்யபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாது செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிர்ப்பு எழவும் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம் எனச் சொல்லி வந்தார். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, சூழல் மாறியது.

அ.தி.மு.கவைச் சேர்ந்த பல நிர்வாகிகள் த.வெ.கவுக்குச் சென்றனர். அவர்கள் தொகுதி முழுவதும் சுற்றி வந்து வாக்குகளைச் சேர்த்தனர். எங்களுக்குக் களம் சாதகமாக இருந்தாலும், நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை.

இந்தத் தகவல்கள் பொதுச் செயலாளர் காதுக்குப் போனதும் மாவட்டச் செயலாளரைக் கூப்பிட்டு சத்தம் போட்டதோடு, சேலத்தில் இருந்து ஒரு டீமை இறக்கி வேலை பார்க்கச் சொன்னார். ஆனால், அவர்களால் லோக்கல் நிர்வாகிகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல, எதிர்ப்புகள் இருந்தாலும் த.வெ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இறங்கி வேலை பார்த்தனர். எதிர்ப்புகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குச் சாதகமாக மாற்றினர். முதல்வர் பிரசாரமும் மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

அதேபோல, தி.மு.க சார்பில் பல முன்னாள் அமைச்சர்கள் மைக்ரோ லெவலில் பிரசாரம் செய்து வாக்குகளைச் சேகரித்தனர். ஆனால், இங்கே பல நிர்வாகிகள் பூத்துகளுக்குக் கூட ஒழுங்காகச் செல்லவில்லை. வெளியூரில் இருந்து வந்த நிர்வாகிகளையும் முறையாக ஒருங்கிணைத்து பிரசாரம் செய்யவில்லை. பொருளாதார ரீதியாகவும் பொதுச் செயலாளர் தொடங்கி யாரும் பர்ஸைத் திறக்காமல் இருந்தது பெரிய பின்னடைவாகிவிட்டது” என்றனர்.

மேலும் சிலர் பேசும்போது, ”இந்த இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிபெறக்கூடாது என்பதற்கு மிகப்பெரிய அளவில் வேலை நடந்திருக்கிறது” என்றவர்கள். தொடர்ந்து பேசும்போது,

“2026 பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த முத்து வெங்கடேஷ், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி மகேந்திரன் உள்ளிட்ட பலரும் வேலுமணியின் ஆசியோடு த.வெ.கவுக்குச் சென்றனர். அ.தி.மு.க நிர்வாகிகள் பலரை, செங்கோட்டையன் சென்று தனியாகச் சந்தித்தார்.

அதற்கும் வேலுமணியின் சர்ப்போர்ட் இருந்தது. தவிர, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே த.வெ.கவுக்கு ஆதரவாக வேலை பார்த்தனர்.

எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து கடைசி நேரத்தில் ஆட்களை இறக்கியும் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது. மதுராந்தகத்தை அவர் ஆரம்பம் முதலே கைவிட்டார் என்றால் தாராபுரத்தில் நிர்வாகிகள் அவரைக் கைவிட்டனர். உண்மையைச் சொல்லப்போனால் நம்பிக்கை துரோகம் செய்திருக்கின்றனர். இரண்டில் ஒன்று வெற்றிபெற்றுவிட்டாலும் மீண்டும் அவர் இஷ்டப்படியே நடந்துகொள்வார் என்பதால் மிகப்பெரிய உள்ளடி வேலை நடந்திருக்கிறது” என்கிறார்கள்.

இரண்டு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க தலைமை மீது தொங்கும் கத்தியாகவே ஆரம்பம் முதல் பார்க்கப்பட்டது. இப்போது இரண்டு தொகுதியிலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்திருக்கிறது. இனிவரும் நாள்களில் கட்சிக்குள் மிகப்பெரிய கலகங்களை எதிர்பார்க்கலாம்.

Source link


Latest News

View All

  1. Вызвать нарколога на дому можно, если состояние больного позволяет проводить лечение вне стационара. Бригада выезжает по указанному адресу, врач оценивает…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed