புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அக்டோபர் 6-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி சார்பில் அசோக் ஆனந்த்தும், காங்கிரஸ், த.வெ.க மற்றும் வி.சி.க சார்பில் விநாயகமும், தி.மு.க சார்பில் சேது செல்வமும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீமும் களம் கண்டனர்.
வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. நான்கு சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்குகளில் 13,358 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த்.
காங்கிரஸ் – த.வெ.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறார். அதன் மூலம் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் அசோக் ஆனந்த். அதேபோல தி.மு.க சார்பில் போட்டியிட்ட சேது செல்வம் 2,664 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் 310 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகுமாரி 172 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். அதேபோல நோட்டாவுக்கு 255 வாக்குகள் விழுந்திருக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து த.வெ.க ஆதரவுடன் நேயம் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட விநாயகம், 5,483 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் வந்தார்.
அதன்படி 4,541 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல்வர் ரங்கசாமியை விட கூடுதலாக, இடைத்தேர்தலில் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் அசோக் ஆனந்த். ஆளும் கட்சி அந்தஸ்து, அசோக் ஆனந்த்தின் தனிப்பட்ட பொருளாதாரப் பலம் போன்றவையே வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதேபோல த.வெ.க ஆதரவுடன் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 5,483 வாக்குகள் பெற்ற விநாயகம், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கி அதைவிட 607 வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார். கடந்த தேர்தலில் 2,900 வாக்குகள் பெற்று நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான், த.வெ.க.வின் வாக்குகள் சரிந்ததாகக் கூறுகின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.

அதேபோல கடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 3,984 வாக்குகள் பெற்றவரைத்தான் இந்த இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளராகக் களமிறக்கியிருந்தது தி.மு.க. ஆனால் அவர் பொதுத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு பெற்ற வாக்குகளை விட, 1,320 வாக்குகள் குறைவாகப் பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறார்.
பொதுத்தேர்தலிலும் அவர் டெபாசிட் இழந்தார் என்பது தனிக்கதை. அதேபோல நாம் தமிழர் கட்சி சாபில் கார்த்திகுமாரி 172 வாக்குகள் பெற்று நோட்டாவுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்.

























Вывод из запоя представляет первый этап более длительного пути к трезвости. Детоксикация помогает уменьшить последствия интоксикации, но не устраняет причины…