`மக்கள் தீர்ப்பு என்ன?' - பெரும் எதிர்பார்ப்பில் இடைத்தேர்தல் முடிவுகள்! - தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்!| "What is the people's verdict?" – by-election results! – Vote-counting centers are ready!

தமிழ்நாட்டில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது பதிவான 89.9 சதவீதத்தை விட 9.65 சதவீதம் குறைவாகும். வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட 642 பேலட் யூனிட்கள், 321 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 337 VVPAT இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 320 வாக்குச்சாவடிகளின் வாக்குகள், 23 சுற்றுகளாக எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனித் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் இங்கு 93.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியின் 285 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அடுத்துள்ள ஆத்தூரில் அமைந்துள்ள சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மைய வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்
KURUZ THANAM

150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 3 அடுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், தி.மு.க. சார்பில் சேதுசெல்வம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம் உள்ளிட்ட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் 87.10% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதால், வாக்குப்பதிவு 6.29% குறைந்துள்ளது.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாளை காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்து மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் நான்கு சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே, யார் முன்னணியில் இருக்கிறார் என்ற முதற்கட்ட நிலவரம் தெரிந்துவிடும்.

மேற்கு வங்கம்

நந்திகிராம்:

நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரியின் முன்னாள் உதவியாளரின் தாயார் ஹசிராணி ரத் போட்டியிடுகிறார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான் தேவ், சுவேந்து அதிகாரியைச் சந்தித்த பிறகு தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், காங்கிரஸின் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி தரப்பு ஆதரவு அளித்தது. மேலும், ரிதப்ரதா பானர்ஜி தரப்பு திரிணமுல் காங்கிரஸ் சார்பில் முகம்மது எதிசமுல் ஹேக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சந்திகோபால் கிரியும் களம் காண்கின்றனர். 80.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ரெஜிநகர்:

ரெஜிநகர் மற்றும் நெளடா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சித் தலைவர் ஹுமாயூன் கபீர், ரெஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தொகுதியில் ஹுமாயூன் கபீரின் மகன் கோலம் நபி ஆசாத் (ஆம் ஜனதா உன்னாயன் கட்சி), பாஜக சார்பில் சாகரவ் சர்க்கார், மம்தா பானர்ஜி தரப்பு திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ரபியூல் ஆலம் சௌதரி, ரிதப்ரதா பானர்ஜி தரப்பு திரிணமுல் காங்கிரஸ் சார்பில் சபியூஜமான் ஷேக் மற்றும் காங்கிரஸ் சார்பில் முகம்மது அப்துல்லாஹி கைபி ஆகிய வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ரெஜிநகர் தொகுதியில் 79.90 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அஸ்ஸாம்: நாகோன்

நகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 76.19% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2024 தேர்தலின் 85.3% வாக்குப்பதிவை விடக் குறைவாகும். இந்தத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நாளை நடைபெறுகிறது.

Source link


Latest News

View All

  1. Врач оценивает общее состояние и выраженность алкогольной абстиненции. Если медицинская помощь может быть оказана дома, начинается выбранная программа. При признаках…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed