பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், “கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம்; அரசுக்கு வேறு சட்டமா? பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றுவதற்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இடநெருக்கடி மிகுந்த பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவச்சொந்தங்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் நிலையில், நிலப் பயன்பாடு மாற்ற நடவடிக்கைகளை தவெக அரசு முன்னெடுப்பது, மக்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்காத ஆணவப்போக்கையே காட்டுகிறது.

குடியிருப்பு, பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளி வகைப்பாடுகளில் இருந்த நிலத்தை இடைத்தேர்தல் முடிந்த அடுத்தநாள் வணிகப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தவெக அரசுக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் இடைத்தேர்தலுக்கு முன்பே ஏன் மாற்றவில்லை?
ஒருபுறம் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை விதி மீறல் என்று கூறி மக்கள் கட்டிய 129 கட்டிடங்களை காலி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.
மறுபுறம் கடற்கரை பகுதியான பட்டினப்பாக்கத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைச் செயலகம் கட்ட வேக வேகமாக அரசே முயல்வது நியாயம்தானா? கடற்கரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு மட்டும்தானா? அரசுக்கு இல்லையா? மக்களுக்கு ஒரு நீதி? அரசுக்கு வேறு நீதி என்பது நீதியல்ல; பெரும் அநீதி!

























Общаемся без осуждения и давления, сохраняя спокойную атмосферу для пациента и семьи. Изучить вопрос подробнее – [url=https://2vyvod-iz-zapoya-moskva77.ru/]https://2vyvod-iz-zapoya-moskva77.ru/[/url]