SIR விவகாரம்: "துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்" - காங்கிரஸ் சரமாரி கேள்வி | Congress questions Modi regarding SIR, challenging him to answer if he has the courage

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதப்போரை விட கொடூரமான ஒரு போரை சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தியிருக்கிறது ஜனநாயக விரோத பா.ஜ.க அரசு. எஸ்.ஐ.ஆர் எனும் விஞ்ஞான ஆயுதத்தைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

இத்தனை நாட்கள் மோடி அரசின் மீது எழுப்பப்பட்ட அத்துனை தேர்தல் முறைகேடு குறித்த கேள்விகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே நேற்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் காட்டுகின்றன. மோடியின் கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் சாயம் வெளுத்துள்ளது.

மாற்றப்பட்ட படிவம் 6க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தின் பெயரைக் சொல்லி பொய் சொன்னது மட்டுமல்லாமல், அதைச் சர்வசாதாரணமாக பொதுவெளியில் வெளியிடும் துணிச்சல் இந்தத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எங்கிருந்து வந்தது?

ஆனால், “மாற்றப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை” என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் அமர்வு தேர்தல் ஆணையத்தின் முகத்தில் அடித்தாற்போல் உண்மையை உடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் பெயரிலேயே தேர்தல் ஆணையம் இப்படி ஒரு பகிரங்கப் பொய்யை அவிழ்த்துவிட்டது ஏன்?

யாருடைய அரசியல் தேவைக்காக நீதிமன்றத்தையும் கூட்டு சேர்க்க துணிந்தீர்கள்? இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம்.

கணபதி சிவக்குமார்

கணபதி சிவக்குமார்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் 14-க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளையும், பரிந்துரைகளையும் ஓரங்கட்டிவிட்டு, தன்னிச்சையாக எஸ்.ஐ.ஆர் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

Source link


Latest News

View All

  1. Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Получить больше информации – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe3.ru/]услуги капельницы на дому цена[/url]

  2. В этой статье рассматриваются актуальные вопросы, связанные с развитием медицинской науки и её внедрением в повседневную практику. Особое внимание уделено…

  3. Вывод из запоя в Краснодаре необходим в ситуациях, когда употребление алкоголя продолжается несколько суток, самочувствие ухудшается, а самостоятельно прекратить пить…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed