By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!'- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன? | tharapuram by election code of conduct update.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 – ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசார நிறைவடைய உள்ள நிலையில், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தாராபுரத்தில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று மக்களை சந்திக்கிறார். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தாராபுரம்

தாராபுரம்

தமிழ்நாடு அரசின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “வரும் 6- ம் தேதி காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று மாலை 6:00 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்களை யாரும் நடத்தக் கூடாது. திரைப்படங்கள் தொலைக்காட்சிகள் சமூக வலைதளங்கள் என எந்த வகையிலும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. இதை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இருந்து, வெளியூர் நபர்கள் இன்று மாலை 6:00 மணிக்குள் வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்களில், வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வாக்காளர்களை அழைத்து வர வேட்பாளர்கள் எந்த வாகன ஏற்பாடுகளையும் செய்யக் கூடாது. ஓட்டுச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்கு வெளியே வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் அமைக்கலாம். அதில், இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும். அக்டோபர் 4- ம்‌ தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Source link


Latest News

View All

  1. Vavada atbildigas speles riki ietver iemaksu limitus, sesijas ilguma ierobezojumu un atdzisanas periodu pec limita mainas. Atspelesanas progress tiek radits…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed