பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. இத்தேர்தலில் தங்களுக்கு 150 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. இத்தேர்தலை எதிர்கொள்ள முதல் கட்டமாக காங்கிரஸ் தலைமை இரு மாநிலங்களுக்கும் புதிய தலைவர்களை நியமித்து இருக்கிறது. பஞ்சாபில், ஹாக்கி ஜாம்பவான் பர்கத் சிங்கும், உத்தரப் பிரதேசத்தில், ஆராதனா மிஸ்ரா மோனாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரும்தான் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கட்சியை வழிநடத்த இருக்கின்றனர்.
அகிலேஷ் யாதவுடம் நட்பு.!
உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் காஸ் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மோனா, ராஜ்யசபா எம்.பி பிரமோத் திவாரியின் மகள் ஆவார். 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸின் உத்தரப்பிரதேச தலைவராக இருந்த அஜய் ராய்க்கு பதிலாக மோனா நியமிக்கப்பட்டுள்ளார். மோனாவும் அவரது தந்தையும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றத்தை சமாஜ்வாடி கட்சி தலைமை வரவேற்றுள்ளது. இது குறித்து மோனா அளித்த பேட்டியில்,”‘எஸ்ஐஆர் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு அல்லது பணவீக்கம் என பாஜகவின் தோல்விகளை மையமாக வைத்து நாங்கள் அரசாங்கத்தை எதிர்கொள்வோம். 2027-ல் பா.ஜ.க ஆட்சி அகற்றப்பட்டு உத்தரபிரதேசத்தில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்,” என்று கூறினார். மக்களவை எம்.பி இம்ரான் மசூத் உத்தரப்பிரதேச செயல் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் தேவேந்திர நிஷாத் மற்றும் அலோக் பிரசாத் மாநில பிரிவின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் ராஜா சிங் வாரிங், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடனான கடுமையான மோதலுக்கு பிறகு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு சிரோமணி அகாலி தளத்தில் இருந்த ஜாட் சீக்கிய முகமான பர்கத் சிங் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

























Granted my mood today might be elevating my reading experience but I still think this is genuinely good, and a…