லண்டனைச் சேர்ந்த 11 வயது பிரிட்டிஷ்-இந்திய செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், செஸ் விளையாட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். உலகின் இளம் வயது பெண் கிராண்ட் மாஸ்டர் (Woman Grandmaster – WGM) என்ற சாதனையை படைத்த அவரை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இளம் வயதில் உலக சாதனை
சமர்கண்ட், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் போதனா சிவானந்தன் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் WGM பட்டத்தை பெற்ற இளம் வயது செஸ் வீராங்கனை என்ற சாதனை அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த புதிய சாதனையுடன் போதனாவின் கின்னஸ் உலக சாதனைகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு கின்னஸ் சாதனைகள்
10 வயதிலேயே போதனா இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்திருந்தார். இளம் வயதில் Chess Woman International Master பட்டத்தை பெற்றது மற்றும் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இளம் வயது பெண் வீராங்கனை என்ற சாதனைகள் அவற்றில் அடங்கும்.
அவரது முந்தைய இரண்டு சாதனைகளுக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய WGM சாதனைக்கான சான்றிதழ் பின்னர் வழங்கப்பட உள்ளது.
5 வயதிலேயே தொடங்கிய செஸ் பயணம்
போதனாவின் செஸ் பயணம் 5 வயது 8 மாதங்களில் தொடங்கியது. செஸ் போர்டில் உள்ள குதிரை காயின் மீது ஏற்பட்ட ஆர்வமே, அவரை செஸ் கற்றுக்கொள்ளத் தூண்டியது. ஆறு வயதிலேயே அவர் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெறத் தொடங்கினார்.
செஸ் விளையாட்டில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் போதனா, தனது ஆர்வத்தை தொடர்ந்து வளர்த்துக்கொள்வதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பாராட்டு
போதனாவின் சாதனை குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் கிரெய்க் கிளென்டே, குழந்தைப் பருவ ஆர்வம் எவ்வாறு மிகப்பெரிய சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு அவரது பயணம் சிறந்த உதாரணம் என தெரிவித்துள்ளார்.
புதிய WGM சாதனை, Guinness World Records 2027 புத்தகம் அச்சிடப்பட்ட பிறகு நிகழ்ந்ததால், அந்தப் பதிப்பில் இந்த சாதனை இடம்பெறவில்லை. எனினும், அவரது முந்தைய இரண்டு சாதனைகள் 2027 பதிப்பில் இடம்பெற்றுள்ளன.
இளம் செஸ் வீரர்களுக்கு போதனாவின் அறிவுரை
தன்னைப் போன்று செஸ் விளையாட்டில் சாதிக்க விரும்பும் இளம் வீரர்களுக்கு, தங்களுக்கு பிடித்ததை மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே போதனாவின் அறிவுரை.
11 வயதிலேயே மூன்று கின்னஸ் உலக சாதனைகளை வசப்படுத்தியுள்ள போதனா சிவானந்தனின் செஸ் பயணம், சர்வதேச அளவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
Hashtags: #BodhanaSivanandan #Chess #GuinnessWorldRecords #WGM #ChessNews #IndianChess #ACTPNews

























Reading this gave me confidence to make a decision I had been putting off, and a stop at qulmora reinforced…