"கோட்டை விட்ட தவெக, சக்சஸ் செய்த திமுக" - கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது என்ன? | "TVK Missed DMK Succeeded" – What Happened in Kumbakonam Mutual Aid Fund Election?

இந்தச் சூழலில், நிதி நிறுவனத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், இயக்குநர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநர் வேலப்பன், கூடுதல் இயக்குநர் ரவிசந்திரன் ஆகிய நான்கு பேரின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் கடந்த செப் 27 முதல் 30ம் தேதி வரை இ-ஓட்டிங் முறையில் தேர்தல் நடந்தது.

இதில், மீண்டும் கல்யாணசுந்தரம், வேலப்பன், அன்பழன், ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்று நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட மாநகர செயலர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் விஜய்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஞ்சனா, ஸ்ரீதேவி, மாணவரணி மாநகர தலைவர் சந்தேஷ் உள்ளிட்டோர் இ–ஓட்டிங் முறைக்கு விண்ணப்பிக்காமல், அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்ததால், விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தவெக-வினர் போராட்டம்

தவெக-வினர் போராட்டம்

இந்நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தச் சூழலில் தங்கள் மனு நிராகரிக்கப்பட்டதால் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் அலுவலத்திற்குள் தவெக மாநகர செயலளர் முருகானந்தம் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட தவெக-வினர், நிர்வாக இயக்குநர்களுக்கான இ-ஓட்டிங் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறியும் நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களின் அறைகளுக்கு முன்பு அமர்ந்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த போலீஸார் தவெக-வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் நேற்று முழுவதும் கும்பகோணம் பரபரப்புடன் காணப்பட்டது.

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed