கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சைக் குத்தியிருக்கிறேன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மனதில் நிறைந்திருக்கின்றனர், எப்போதும் திமுக எதிர்ப்பு அரசியல் செய்து பழகியவன், என் வழி தனி வழி என்று நிராகரித்து விட்டார்.
அதன் பிறகும் பொறுமையாக இருந்தவர் வேலுமணி ஆதரவாளர் என்கிற அடையாளத்தில் இருந்தும் வெளிபட நினைத்தார். இந்நிலையில், விஜய் சரவணன், சில முறை சரவணனைச் சந்தித்து எங்க கட்சிக்கு வாங்க எனக்கும் பலமாக இருக்கும் என்றிருக்கிறார். இருவருக்கும் நெருக்கமான சிலர் பாலமாக இருக்க இது கைகூடி விட்டது. எதிர்பார்த்ததைப் போலவே சரவணன் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
எம்.எல்.ஏ விஜய் சரவணன் கைபிடிச்சி அழைத்துச் சென்றார். சரவணனுக்கு தவெக கட்சி துண்டை போத்திய என்.ஆனந்த் ரெண்டு சரவணனும் ஒண்ணா வேலை செய்யுங்க, உள்ளாட்சித் தேர்தல் தான் நமக்கான குறி என்று வாழ்த்தினாராம்” என்றனர்.
என்.எஸ்.சரவணன், தவெக-வில் இணைந்தது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தஞ்சாவூர் அரசியலில் பேசு பொருளாகவும் இருந்து வருகிறது.

இது குறித்து சரவணன் கூறுகையில், ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு எளிய பின்னணி கொண்டவர்களையும் எம்.எல்.ஏ, அமைச்சர்களாக்கியவர் வெற்றி தளபதி முதல்வர் விஜய். கட்சி பெயர்தான் வேறே தவிர கொள்கை ஒன்றுதான். மாற்றுக்கட்சியான அதிமுக-வில் இருந்து வந்தாலும் அவர்கள் எப்போதும் போல் இருக்க அனுமதித்திருக்கும் மனப்பாங்கு போதும்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா-வுக்கு உரிய மரியாதை தருகிறார். என்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகே பிரசாரம் செய்கிறார். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர் கூட இதைச் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் மனம் ஒத்தவர்களுடன் பயணிப்பதே நல்லது, அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும்.
நல்லாருப்போம், நல்லாருப்போம் எல்லோரும் நல்லாருப்போம் என்கிற மனப்பாங்கு கொண்ட தலைவர் முதல்வர் விஜய், தலைமையில் அடுத்த அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்” என்றார்.

























Granted my mood today might be elevating my reading experience but I still think this is genuinely good, and a…