வீரமணி


“ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்” என்று பாஜக முன்னாள் மகளிர் தேசிய அணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகளும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.

வீரமணி

கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி பல ஏழைச் சிறுமிகளிடம் அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தவறான முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இத்தகைய சம்பவங்களுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனைகளே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தினை வழங்கும்.

குறிப்பாக, இந்த போக்சோ வழக்கை முடித்து வைக்க காவல்துறை ஏற்கெனவே முயன்றதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே மீண்டும் விசாரணை தீவிரமடைந்திருப்பது பல கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவியவர்கள், உண்மைகளை மறைக்க அல்லது விசாரணையைத் திசைதிருப்ப முயன்றவர்கள் என யாரேனும் இருந்தால், அவர்களது பங்கும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். மேலும் FIR -ல் பெயர் சேர்க்காமல் இருக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது திடுக்கிட வைக்கிறது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதி செய்து, அவர்கள் அச்சமின்றி சாட்சியமளிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மேலும் இவ்விவகாரத்தில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்.

இவ்வழக்கில் தமிழக அரசு துரிதமாகவும் வெளிப்படையாகவும் விசாரணையை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும். தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Переходите к игровой раздел https://testnano.ru в удобном онлайн-режиме. Запустите понравившийся слот и приступайте к игре. На платформе можно найти игровые…

  2. Переходите к доступные развлечения пин ап казино в удобном онлайн-режиме. Запустите подходящий игровой формат и переходите к игровому процессу. В…

  3. Переходите к онлайн-игры https://mamapapa-arh.ru среди доступных форматов. Запустите интересующую игру и переходите к игровому процессу. В игровом разделе можно найти…

  4. Откройте для себя варианты игры https://pinup-ru2.ru среди доступных форматов. Запустите подходящий игровой формат и приступайте к игре. В игровом разделе…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed