ஆதவ் அர்ஜுனா


சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

அதே கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதுராந்தகத்தில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி எங்களுடைய வேட்பாளரிடம் நின்றால் தோற்று இருப்பார் என்று.. தம்பி தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டில் ஜெயித்தவன் நான்.

ஆதவ் அர்ஜுனா

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் அதிமுக வென்றிருக்கிறது. சரியாக தெரியாமல் பேசாதீர்கள். உங்களை மாதிரி பல கட்சிக்கு போயிட்டு வந்தவன் நான் கிடையாது. ஒரு கிளைச் செயலாளராக இருந்து இந்த இயக்கத்தினுடைய பொதுச் செயலாளராக உழைப்பால் நான் வந்திருக்கிறேன்.

ஆதவ் அர்ஜுனா முதலில் எந்த கட்சியில் இருந்தீர்கள்? திமுகவில் இருந்தீர்கள். சபரிசனுக்கு பெட்டி தூக்கி கொண்டு இருந்தீர்கள். அடுத்தது எங்கே போனீர்கள் விடுதலை சிறுத்தைக்கு போனீர்கள். அதன் பிறகு என்னை பார்த்து சந்தித்து பேசினீர்கள். அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தம்பி இந்த கட்சியில் பதவி விற்பனைக்கு கிடையாது உழைத்தவர் உழைத்தவர்களுக்கு தான் பதிவு என்றேன். அதன் பிறகு தான் தவெக போனார். அங்கு போய் அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். நீங்கள் பேசலாமா? அதிமுகவை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Когда человек переезжает в СПб на несколько месяцев или лет, важно различать постоянную прописку и место пребывания. Если основной адрес…

  2. Если вы снимаете жилье в Москве и собираетесь жить там долго, стоит заранее обсудить вопрос регистрации с собственником. Это поможет…

  3. Когда человек переезжает в СПб на несколько месяцев или лет, важно различать постоянную прописку и место пребывания. Если основной адрес…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports