போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' - உக்ரைன் எடுத்திருக்கும் முடிவு! - பின்னணி என்ன? | The Ukrainian government has introduced a bill to legalize pornography.


ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும், போர்ச்சூழலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வரி வசூல் அமைப்புகள் இத்துறையின் மீது கவனம் செலுத்தத் தொடங்கின.

இதனால், படைப்பாளர்கள் வருமானத்தைக் காட்டினால் குற்றவியல் வழக்கையும், காட்டாவிட்டால் வரி ஏய்ப்பு வழக்கையும் எதிர்கொள்ளும் விசித்திரமான சூழல் உருவானது.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்
AI | ChatGPT

“ஓன்லிஃபேன்ஸ்’ தளத்தின் படைப்பாளரான ஸ்விட்லானா ட்வோர்னிகோவா போன்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, லேப்டாப் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த காவல்துறை, லஞ்சம் கேட்ட சம்பவங்களும், மிரட்டல்களால் பலர் நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

‘ஓன்லிஃபேன்ஸ்’ தளத்தில் 2023-ல் மட்டும் 7,900 உக்ரைனியர்கள் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஈட்டியுள்ளனர். இந்தப் பெருந்தொகை ஊழலின் பிடியில் இயங்கி வந்த நிலையில், அதிகாரிகளின் லஞ்ச வேட்டையை அரசு வழக்கறிஞர் அலுவலக விசாரணையும் உறுதிப்படுத்தியது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed