புதுக்கோட்டை திமுக: "உன் மகனின் துரோகச் செயல்"- மோதிக்கொண்ட உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி | Udhayam Sanmugam, Ex-Minister Raghupathi Clash in Pudukkottai


“தவெக வெற்றிக்கு உன் மகன்தான் காரணம்!”

உதயம் சண்முகத்தின் இந்தத் திடீர் பேச்சால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சரும் புத்ஜுக்கோ ரகுபதி, உடனடியாகக் குறுக்கிட்டு மிகக் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்தார்.

உதயம் சண்முகம்

உதயம் சண்முகம்

அவர் பேசுகையில், “அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முகமது பர்வேஸுக்கு ஆதரவாக தெருத்தெருவாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது உன்னுடைய மகன்தான்.

உனது மகனின் அந்தத் துரோகச் செயல்பாட்டினால்தான் அங்கு த.வெ.க வெற்றி பெற முடிந்தது. இதை மறைத்துவிட்டு இங்கே வந்து கேள்வி கேட்கிறாயா?” எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

தலைவர்கள் சமாதானம்

இரு தலைவர்களும் நேருக்கு நேர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிக்கொண்டதால், அரங்கத்திலிருந்த இருதரப்பு ஆதரவாளர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளும் கூச்சல் குழப்பமும் நிலவியது.

நிலைமை கைமீறிப் போவதைக் உணர்ந்த கூட்டத் தலைவர் ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடனடியாகச் செயல்பட்டு, இருதரப்பினரையும் கடுமையாக எச்சரித்துச் சமாதானப்படுத்தினர்.

உள்கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்திலேயே முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.எல்.ஏ-வும் பகிரங்கமாக மோதிக்கொண்ட சம்பவம், புதுக்கோட்டை மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed