ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.
இந்தப் போரில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி கொடுக்க ஈரான் தேர்ந்தெடுத்த வழி – ஹார்முஸ் நீர்ச்சந்தி.
உலகின் பெரும்பான்மையான எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகத்தான் நடக்கிறது.
ஈரான் போர் தொடங்கியதும் ஹார்முஸை மூடிவிட்டது ஈரான்.
இந்த வழியை அடைத்தால் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், உலக நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்கும்… எண்ணெய் சந்தை பாதிப்படையும். இதனால், அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி ஏற்படும் என்று பிளான் போட்டது ஈரான்.
இந்தப் பிளான் பெரும்பாலும் நடந்துவிட்டதுதான். ஆனாலும், ஈரான் போர் இன்னும் முடிந்தபாடில்லை.

ஹார்முஸ் நீர்ச்சந்தி ஈரான் எல்லையில் விரிந்திருப்பது ஈரானுக்குச் சாதகமான ஒன்று.
அதனால், ஈரான் நினைத்த கப்பல்கள் அந்த வழியைக் கடக்கிறது. ஈரானின் தடையைத் தாண்டினால், அந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனால், பல மில்லியன் டன் எண்ணெய்கள் தாங்கிய கப்பல்கள் ஹார்முஸின் எல்லையில் காத்திருக்கின்றன.
தற்போது ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு மாற்றுப் பாதையாக மாறுவதற்கு சிரியா ஆர்வம் காட்டுகிறது. இது ஈராக்கில் இருந்து சாலை வழியாக எண்ணெய் எடுத்து செல்லும் போக்குவரத்து ஆகும்.
























