'10-க்கு 9; எல்லாம் நம்மளுடையது தானே'- சட்டமன்றத்தில் ஆதவ்வும் அதிமுகவும்!| Adhav arjuna and AIADMK speech in tn Assembly


சட்டமன்றத்தில் இன்று (செப்.1) கைத்தறி, தொழிலாளர் நலன் – குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய தவெக எம்எல்ஏ பிராகாசம், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைவில் முடித்து தருமாறு மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திருவள்ளூர் எங்களுடைய மாவட்டம், 10-க்கு 10 தொகுதிகளை வென்றிருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்றார்.

அப்போது அதிமுகவினர் குறுக்கிட்டு, “10-க்கு 10 தொகுதி இல்லை. நாங்கள் ஒரு தொகுதியை வென்றிருக்கிறோம்” என்றனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “சரி 10-க்கு 9 தொகுதிகளை வென்றிருக்கிறோம். எல்லாம் நம்மளுடையதுதானே… அதிமுகவும், நாமும் ஒன்றுதானே” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

தொடர்ந்து சபாநாயகரும் சிரித்துக்கொண்டே, “அந்த உறவெல்லாம் அவைக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. моментальный отладка стиральных установок и бытовых холодильников в границах Новомосковске Тульской области ! профессионал по адресу домовладение через 60-минутный интервал…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed