உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு சிறப்பாக கொண்டாடினர்.
இன்று உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. மேலும் படிக்க..

”பழகும் உறவிலே பிள்ளை நீயே” தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

பொங்கல் தினத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம்.
விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க..

ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள் ஆரம்பம்! மாநில தலைவர் ருத்ர ராஜு ராஜினாமா; ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு பொறுப்பு?

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தற்போதைய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுடன், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், ஆந்திர மாநில காங்கிரசில் மாற்றங்கள் துவங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் காரணமாக, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (APCC) தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இதன் பிறகு இந்தப் பதவிக்கு சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..

சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்? உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு

சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. மேலும் படிக்க..

அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். மேலும் படிக்க..

Source link


Latest News

View All

  1. Выезд на дому удобен тем, что пациент остается в привычной обстановке и получает наркологическую помощь без посещения центра. Однако домашнее…

  2. В данном материале представлены ключевые тенденции в сфере медицинской науки и практики. Вы узнаете о последних открытиях, инновационных подходах к…

  3. Даже если симптомы кажутся привычными, их характер может меняться от одного эпизода к другому. Медицинский осмотр позволяет определить степень интоксикации…

  4. Полная программа определяется только после консультации. Если алкоголизм продолжается много лет, домашний выезд чаще становится первым этапом более длительного лечения.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed