Did controversial Bollywood actress Urfi Javed convert to Hinduism? She visited a temple in Assam.-சர்ச்சைக்குறிய பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் இந்து மதத்திற்கு மாறினாரா? அஸ்ஸாம் கோயிலில் தரிசனம்


ஆடை அணிவதில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் பாலிவுட் நடிகையும், டிவி பிரபலமுமான உர்ஃபி ஜாவேத், எதைச் செய்தாலும் சர்ச்சைக்குறிய வகையில் செய்வது வழக்கம். அவர் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவரது பெயரை ரிதா பரத்வாஜ் என்று மாற்றிக்கொண்டதாகவும் செய்தி பரவியது.

இச்செய்தி பரவிய நிலையில் அவர் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு வரும் போது வழக்கமான உடைகளை தவிர்த்து பாரம்பரிய உடையில் அணிந்து வந்திருந்தார்.

பின்னர் இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கைகளைக் குவித்தபடியும், நெற்றியில் குங்குமம் வைத்த படி தொடர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் காமாக்யா தேவி கோயிலுக்கு சென்றேன் என்று பகிர்ந்துள்ளார். அதோடு இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக வெளியாகி இருக்கும் செய்திக்கும் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக வெளியாகும் கூற்றுக்களில் எந்த உண்மையும் இல்லை. ஏனது பெயரையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ளவில்லை. எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை. எனது அடையாளத்தில் எந்த வித மாற்றமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சரியாக உண்மைச் சரிபார்ப்பு இல்லாமல் இதுபோன்ற கூற்றுக்கள் ஏன் பரப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு, உர்ஃபி ஜாவேத் பாபுல்நாத் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் கோயிலின் செங்குத்தான படிக்கட்டுகளில் முழங்காலில் ஏறிச்சென்று தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если вы планируете строительство жилья, обратите внимание на [url=https://karkasnye-doma-pod-klyuch13.ru]дом каркасный под ключ[/url] — это современное и экономичное решение для комфортного…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed